பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்வீகச் சட்டமறுப்பு 89 . இத்தகைய சாத்வீக எதிர்ப்பு ஆன்மாவின் வேத னேயை வெளிக் காட்டுவதற்குச் சிறந்த கருவியாகவும், தீய அரசாங்கத்தைத் தெளிவாய் எச்சரிப்பதாகவும் இருக் கின்றது. சீர்திருக்கத்தின் சகல சரித் தி மு. ம். இஃ தல்லவோ ? இதுவாை வாழ்ந்து வந்த அரசாங்கத்தை ஒரு தொகுதி யினர் மறுத்து விட்டால் அதாவது எதிர்த்தால், அநேக மாப் அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை ஸ்தாபித்த வர்களாவார்கள். அநேகமாய் ' என்று சொல்கிறேன்; ஏனெனில் அரசாங்கம் அவர்களை எதிர்த்தால் அவர்கள் பலாத்காரம் உபயோகிப்பதில்லை. அரசாங்கம் தங்கள் விருப்பத்தின்படி நடக்கும் வரை எதிர்த்து அதனுல் சிறைப் படுவதும் சுடப்படுவதுமே அவர்களுடைய வேலே. த்ென்னப்பிரிக்காவில் மூவாயிரம் இந்தியர்கள் திரான் ஸ்வால் அரசாங்கத்திற்குப் போதுமான முன்னறிவிப்பின் பேரில், திரான்ஸ்வால் குடியேற்றச் சட்டத்தை மீறி 1914-ம் வருஷத்தில் திரான்ஸ்வால் எல்லையைக் கடந்து, தங்களைக் கைது செய்யும்படி அரசாங்கத்தைக் கட்டாயப் படுத்தினர். அரசாங்கம் அவர்களே ப் பலாக்காரத்தில் இறங்கச் செய்யவோ, அல்லது கீழ்ப்படியும்படிக் கட்டா யப் படுத்தவோ முடியாமற் போனபொழுது அவர்க ளுடைய வேண்டுகோளுக் கிணங்கியது. சாத்வீக எதிர்ப் பினர் போர் வீரருடைய ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட் டவரே. ஆனல் அவர்களுடைய ஒழுங்கு முறையில் பர் பாப்பு, தட புடல் ஒன்றுங் கிடையாது; ஆகையால் அது சாதாரணமான போர் வீரனுடைய ஒழுங்கு முறையை விடக் கடினமானது. பழி வாங்கும் எண்ண மின்மை யால் சாத்வீகமாய் எதிர்க்கும் சேனைக்குக் கோபம் இருக் கக் கூடாது. ஆகையால் அச்சேனையில் மிகச் சிலர் இருந் காலும் போதும். ஏன்? திமையை எதிர்த்து நன்மையை