பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர்களின் அணிவகுப்பு




புத்தனோர் ஞானி; ரூசோ
புரட்சிக்கு வழிவ குத்தோன்;
கத்தியில் லாமல், ஷாவோ
கருத்தினால் உலகை வென்றோன்;
சத்துச்சொல் இங்கர் சாலோ
சரமழைப் பேச்சுக் காரன்;
அத்தனை பேரும் சேர்ந்த
அணிவகுப் பறிஞர் அண்ணா!


பாரியின் குளிர்சு னைபோல்
பண்பினன்; குறியில் தப்பா
ஓரியின் கூரம் பைப்போல்
ஒச்சிடும் பேச்சு வீரன்;
காரியின் குதிரைத் துள்ளல்
காட்டிடும் எழுத்துக் காரன்;
சீரிய குமணன் போலச்
சென்னியும் தமிழுக் கீவோன்.