பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

முருகுசுந்தரம்



கண்விழித் தெழும்நா ளெல்லாம்
காவிரிச் சோழர் போல
இந்நாட்டு வரலா றென்னும்
இணையற்ற மாளி கைக்குப்
பொன்னோடு போர்த்து கின்றான்;
புதுத்தூண்கள் எழுப்பு கின்றான்:
அண்ணாந்த புகழைக் கொண்ட
அண்ணாத் துரைமா மல்லன்.


குயிலவன் பேரைக் கூவும்:
குன்றத்துத் தென்றல் கூட
வெயில்மறைத் திருக்கும் மாலை
வேளையில் புகழை வீசும்;
மயல்தரு தமிழ நங்கை
மாக்கவி வாணர் நாவில்
பயிலுறும் கால மெல்லாம்
பாடல்கள் பெற்று வாழ்வான்.