பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாளம் தவறாத தமிழிசைப் பாடல்



சட்டை யிடாமல் சைவம் வளர்த்தவர்
கொட்டை கட்டிய நாவலர்-வெள்ளைச்
சட்டை யணிந்து சைவம் மறுப்பவர்
பட்டுக் கோட்டை நாவலர்.


நாற்று நடப்பது போல்நடப் பார் அண்ணா
நாவலர் நடந்துசென் றாலோ-பெரும்
சீற்றக் களிறொன்று அம்பாரி யோடு
செல்வது போலி ருக்கும்.


எங்கள் கலைஞர் பேசினால் வானம்
இடிப்பது போலி ருக்கும்-நம்
நம்பிக்கை நாவலர் பேசினால் காவிரி
நடப்பது போலி ருக்கும்.