பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிக் கவிஞனின்

தீஞ்சுவைக் காவியம்



புரட்சியின் சிகரம் என்னைப் போலக்
குள்ளமாய் இராதென்று கூறினார் அண்ணா.
அண்ணா மலையில் பயின்றஅன் பழகனார்
இந்நாள் அதற்கோர் எடுத்துக் காட்டு
குட்டுவன் போல நெட்டை உருவமும்
நக்கீரன் போல நாக்குத் துணிவும்
செழியன் போலச் செருமுனை விருப்பமும்
பெருஞ்சித் திரன்போல் புலமைச் செருக்கும்
பொருந்தி யிருக்கும் இவரோ, யார்க்கும்
மருட்சியைக் கொடுக்கும் புரட்சியின் சிகரம்.


துடும்ப டித்துக் கூட்டம் சேர்த்துக்
கடும்பகை நடுவில் கட்சி வளர்த்த
பட்டுக் கோட்டை அழகிரி சாமியும்
முஜ்பீர் மீசைப் பன்னீர்ச் செல்வமும்
பிறப்பெ டுத்துப் பெரும்புகழ் நிறுவிய