பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

97


கிறேன். சாஸ்த்திர சம்பிரதாயமும் நிலைக்கும். உன் போன்று உள்ள தோழர்களின் அபிலாஷையும் நிறைவேறும்.

மோ : மராட்டியத் திலகமே! மன்னிக்க வேண்டும். நான் வெற்றி வீரன் சிவாஜி ஆவதை விரும்பி வந்தேனே ஒழிய, ஆரிய தாசனான பிறகு அரியாசனம் ஏறும் துர்ப்பாக்கிய காட்சியைக் காண வரவில்லை. மகராஜ்! ஆரிய சிரேஷ்டர் என்று அர்ச்சிக்கிறீர், ஒரு ஆற்றலற்ற கூட்டத்தை. டார்ட்டாரி தேசத்துப் புரவிகள் மீதமர்ந்து, தகதகவெனும் கவசம் பூண்டு, பளபளக்கும் கட்கம் ஏந்தி, போர்க் குணம் படைத்த மக்கள் இங்குப் புயலெனக் கிளம்பியபொழுது, காய்ந்த புல்லைக் கையிலேந்தி திரிந்த கூட்டம் என்ன செய்தது? தாங்கள் யார்? தங்களுடைய வீர தீரம் எத்தகையது? தாங்கள் எங்கள் கண்களுக்கு மராட்டிய நாட்டிலே மார்தட்டி நின்று, மகத்தான போராட்டங்களை நடத்திய மாவீரராக காட்சியளிக்கிறீர். கட்கமெடுத்து, புரவி மீதேறி, காடு மலை கடந்து சென்று, கடும் போரிட்ட வீரன். ஆனால் அவர்கள் கண்களுக்கு ஒரு சூத்திரராகத் தெரிகிறீர். கண்ணிலும், கருத்திலும் கடும் விஷம் இருக்கிறது காவலா! மராட்டிய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உண்டாக்கவில்லை. மராட்டியரின் ரத்தத்தைச் சிந்தி இந்த மண்டலத்தைப் பெற்றோம். யாக குண்டத்தின் விளைவல்ல மராட்டியம். தியாகத் தீயிலே தோன்றிய தேசம். இந்த வேலையை வேதம் ஒதும் அவர்கள் செய்யவில்லை. நாம் செய்தோம்; நம்மை நிந்திக்கிறார்கள், சூத்திரர்கள் என்று. அதை நாம் ஏற்றுக் கொள்வதா, மன்னா ! இது நமது வீழ்ச்சியின் அறிகுறி என்பேன்.

2. தள : தளபதிகளே! மராட்டிய மண்டலத்திற்கு ஒரு மன்னன் தேவை. மக்களின் விருப்பம் மட்டுமல்ல, பரத கண்டம் முழுவதும் இதே பேச்சாக உள்ளது. ஆகவே நாம் சில்லறை விஷயங்களைப் பேசிக்கொண்டு சிக்கலை