பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அறிஞர் அண்ணா


காக்கத் தயங்காதீர். மணிமுடி தரிக்க உமக்கு எந்த ஜடாதரியின் தயவும் தேவையில்லை.

சிவாஜி : தயவல்ல! ஆசீர்வாதம் தானே அது ! அதைப் பெறுவதிலே இழிவு என்ன?

1. தள : சாஸ்திரப் பலத்தைத் தான் தேடுகிறோம்.

மோகன் : மகனை இழந்தாலும் மனம் தளராத மாதர்கள் மராட்டியத்திலே இருக்கிறார்கள். வீரர்கள் ஏராளமாக உள்ளனர். தியாகப் புருஷர்கள் இருக்கிறார்கள். இவர்களால் வரும் பலம் உங்களுக்குப் பலமாகத் தோன்றவில்லை. மகராஜ்! பச்சிளங் குழந்தைக்குப் பாடுவது போல் இருக்கிறது தங்களுடைய வாதம். காகப்பட்டர் தங்களைச் க்ஷத்திரியராக்குகிறார். தாங்கள் தோன்றிய திருக்குலத்தையல்ல. அந்தக் குலம் என்றும் சூத்திரக் குலமாகவே இருக்குமே. தங்களை எங்களிடமிருந்து பிரித்து விடுகிறார். தாங்கள் பிறந்த குலம் தாழ்ந்தது. நாடாளத் தகுதியற்றது என்று தாங்களே ஒத்துக் கொள்ளும்படி சொல்கிறார். பெற்ற தாயைப் பிச்சைக்காரியாக்கிவிட்டு, மகன் பெருநிதி பெற்று வாழ்ந்தால் அவனை பெரியோன் என்று பேதையும் கூறானே. குடியானவர் குலத்துக்கு என்ன மாசு? நமது குலத்தைக் குறை கூறும் ஏட்டை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அவர்கள் காட்டும் ஏட்டின் துணைகொண்டு, நாம் நாட்டை மீட்டிருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்கலாம். எதிரிகள் நம்மைத் தாக்கிய போது அந்த ஏடு கேடயமாக இல்லை, வாளாக இல்லை, வாளையிடும் உறையாகக் கூடப் பலனளிக்க வில்லையே! ஏன் அந்த ஏடு மகராஜ்?

சிவாஜி : சந்திரமோகன்! ஆரியர்களின் அபிப்பிராயப்படி நடப்பதால் நீ இவ்வளவு அதிருப்தி கொள்ளலாமா? நானும் முதலிலே கோபித்துக் கொண்டேன். ஆனால் இப்போது காக்கப்பட்டரின் யோசனை இருதரப்பாருக்கும் திருப்திகரமாக இருக்கிறது என்றே எண்ணு