பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

99


கிளம்பிய நீர், புதுமையைக் கண்டீர். கோழையும் வீரனானான்; கோட்டைகள் தூளாயின்; கொட்டினோம் வெற்றி முரசு; பறக்கிறது, சுதந்திரக் கொடி.

சிவா : மோகனா! காகப்பட்டரின் யோசனையை மறுத்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்காமலே பேசுகிறாய்.

மோ : என்ன நேரிடும்? காகப்பட்டர் தமது ரத, கஜ, துரக பதாதிகளுடன் மராட்டியத்தின் மீது படையெடுத்து விடுவார். நாம் அவரது அசகாய சூரர்களால் தோற்கடிக்கப் பட்டு விடுவோம்! அதுவா சத்திரபதி தங்கள் சிந்தை கலங்குவதற்குக் காரணம்?

சிவா : மோகன்! நீ என்னைக் கேலி செய்கிறாய்! நான் நெடுநேரமாக உனது பேச்சுக்கு இடமளித்து வந்தேன். இனி வாதிடப் போவதில்லை. நான் காகப்பட்டரை வரவழைப்பதென்று தீர்மானித்து விட்டேன். தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இனி நீ போகலாம்; காகப்பட்டரை வரவழைக்க ஏற்பாடுகள் தயாராகட்டும்.

(மோகன் தலை குனிந்து நிற்கிறான். சபை கலைகிறது. மோகன் போகிறான். சிவாஜி. உலலியப்படி)

சந்திரமோகன் கூறுவது அவ்வளவும் உண்மைதான்!

(கோட்டைகளைப் பார்த்து)

அதோ தோர்ணா, அந்தக் கோட்டையைப் பிடிக்க நடந்த பயங்கரச் சண்டையை நினைத்துக் கொண்டால், ஆபத்தைத் துரும்பாக எண்ணிய சிவாஜியின் நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்.....? எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. சத்திரபதி இந்தக் கணவாயின் பக்கம் போகக்கூடாது. ஏன்? எதிரியின் படை பலம் அதிகம். கோழைகள் விலகட்டும்; வீரர்கள் பின் தொடரட்டும். கொட்டு முரசு என்று உத்தரவிட்டுப் பாய்ந்த சென்று வெற்றி பெற்ற