பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

107



காட்சி - 24

இடம் : வீதி

உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குப்பட்டர், வீரர்கள், கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர் வாத்திய கோஷ்டி

(கேசவப்பட்டரும், பாலச்சந்திரப்பட்டரும் எதிர் கொண்டு அழைக்கின்றனர். சீடர்கள் சாமரம் வீசுகின்றனர்).

காசி வாசி காகப்பட்டருக்கு ஜே! குரு மகாராஜன் குண்சீலன் காகப்பட்டருக்கு ஜே! சகல சாஸ்திர விற்பன்னர், வேத விற்பன்னர், வேதியகுல வேந்தர் காகப்பட்டருக்கு ஜே! என்ற கோஷம்.

தளபதிகள் மாலை மரியாதையுடன் வருகின்றனர். மாலைகளிலே ரங்குப் பட்டர் கங்கா தீர்த்தம் தெளித்து, பிறகு ஏற்றுக் கொள்கிறார், தளபதிகள் பல்லக்கு அருகே சென்று வீழ்ந்து பணிகிறார்கள். ரங்கு அவர்களை விலக்கிச் செல்கிறார். தளபதிகள் பயபக்தியுடன் பின்னால் செல்லுகிறார்கள். மீண்டும் கோஷம் ஊர்வலம் செல்லுகிறது. ஊர்வலத்தின் கடைசியிலே தளபதிகள் செல்கின்றனர்.

காட்சி - 25

இடம் : தர்பார்

உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, பட்டர்கள், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோடந்த், சிட்னீஸ்

(தளபதியிடம் )

காகப் : நாம் நமது சீடருடன் பேச வேண்டும். நீங்கள் போய் வெளியே இருக்கலாம்; பிறகு அழைப்போம்.

(தளபதி சென்ற பிறகு)

ரங்கு : இப்ப என்ன சொல்றே! நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தைப் பார். நமது பாதத்திலே வீழ்ந்து