பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

109


அமருக! அஞ்சாநெஞ்சுடைய ஆரிய சேவா சிம்மமே, அமருக!

(சிவாஜி அமருகிறார்)

நமது கட்டளையை ஏற்றுக் கொண்டது கண்டு சித்தம் களித்தோம். ஏனெனில் அந்தக் கட்டளையை மீறினால் இம்மையில் இம்சையும், மறுமையில் மாபாவமும் சம்பவிக்கும் என்று மாந்தாதா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிவா : ஆரியவர்த்தனா! என் பட்டாபிஷேக சம்பந்தமாக ஆட்சேபனை கிளம்பிய போது கிளம்பிய புயல் இன்னும் அடங்கவில்லை.

காகம் : புயலா? சனாதன சத்காரியத்தை எதிர்த்திட எந்தச் சண்டமாருதத்தாலும் ஆகாதே.

சிவா : தாங்கள் அறியமாட்டீர்கள். அந்தப் புயலின் வேகத்தை. சூத்திரருக்கு நாடாள ஏன் உரிமையில்லை? சாஸ்திரம் தடுப்பது ஏன் என்று கேட்கின்றனர். என்னோடு தோளோடு தோள் நின்று போரிட்ட வீரர்கள்.

காகப் : வீரர்கள் கேட்டனரா? பாவம்! அவர்கள் வீரர்கள்தானே? விவேகிகள் அல்ல பார்!

சிவா : சூத்திரருக்குத் தாழ்நிலை தான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா?

காகப் : இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. இகபர சுகம் இரண்டுக்குமல்லவோ சாஸ்திரம். அது மனு, பராசுரர், பாக்கிய வல்கியர் போன்ற ரிஷி ஸிரேஷ்டர்களின் பாஷ்யங்களோடு ஜொலிக்கின்றன.

ரங்கு : விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். சூத்திரருக்கு ஏன் தாழ்நிலை?

காகப் : (புன்சிரிப்புடன்) குழந்தாய்! நீ ஆகமத்தின் அடிச்சுவடையும் அறியவில்லையே. சிருஷ்டிகளின் கர்த்தா பிரம்மதேவன். பிரம்மதேவன் பிரபஞ்சத்தை