பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அறிஞர் அண்ணா


காகப் : யோசனையல்ல, கட்டளை.

சிவா : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு...!

காகப் : ஆரியருக்கு உண்டு; அவர்கள் பூதேவரானதால்.

சிவா : கட்டளையை மறுக்க முடியும் என்னால்.

காகப் : முடியாது! மறுத்தால் முடி கிடையாது.

சிவா : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும்!

காகப் : வீராதி வீரன்! அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.

சிவா : முடியாது என்றால் என்ன செய்வீர்?

காகப் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.

சிவா : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.

காகப் : உண்மை! உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.

சிவா : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?

காகம் : என்ன நடக்கும்! என் உயிர் போகும். ஆனால் என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.

சிவா : எவ்வளவு ஆணவம்?

காகப் : யாருக்கு?

(சிவாஜி மௌனமாக)

சிவா : என்னென்ன சடங்குகள் நடை பறவேண்டும்?