பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

115


காகப் : அழைத்து வாயேண்டா நம்மவா வருவதற்குமா தடை? போடா! போய் அழைத்து வா! அப்படியே அங்கு மிங்கும் உலவிக் கொண்டிருக்கும் வாள் தூக்கிகளை, சந்தடி செய்யாமல் சற்று தூரமாகவே இருக்கச் சொல்லு. அவர் ஏதோ அந்தரங்கமான விஷயந்தான் பேச வருவார்.

(ரங்கு மோரோபந்த்தை அழைத்துவர)

மோ : நமஸ்தே, குருஜீ! நமஸ்தே!

காகப் : வருக பிரதம மந்திரியாரே அமருக இப்படி அருகில், அடே, ரங்கு! பாலும், பழமும்...

மோ : வேண்டாம் ஸ்வாமி! நான் வந்திருப்பது...

காகப் : முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன்.

மோ : குருதேவா! இவர்?

காகப் : நமது சீடன்! பரம சீடன்! தாராளமாகப் பேசலாம்.

மோ : தாங்கள் தயவு செய்து கோபியாமல் என் வார்த்தையைக் கேட்டருள வேண்டும். சிவாஜியை க்ஷத்திரியனாக்க, மகுடாபிஷேகம் செய்ய தாங்கள் வந்திருப்பது அவ்வளவு உத்கிருஷ்டமான காரியம் அல்ல என்பது என் அபிப்பிராயம்.

காகப் : தீர்க்க ஆலோசனைக்குப் பிறகே வரச் சம்மதித்தேன். மோரோ பண்டிதரே! ஏன் தாங்கள் கலங்கக் காரணம்?

மோ : இந்தப் பட்டாபிஷேகம் பாவ காரியம் என்று சொல்லி இந்த முயற்சியைப் பலமாக எதிர்த்தவன் நான்.

காகப் : அப்படியா, ஏன்?

மோ : சாஸ்திர விரோதம், புது சம்பிரதாயம். எதிர்கால ஆபத்து இந்த ஏற்பாடு என்பதால் தான். தாங்கள் அறியமாட்டீர்கள், மராட்டியத்தில் நடைபெற்று வரும்