பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அறிஞர் அண்ணா


செயல்களை, பழைய ஐதீகங்களைப் பாழ்படுத்தும் ஓர் பயங்கர முயற்சியை சாது சன்யாசிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும். அவர்கள் எண்ணத்தின்படி காரியம் நடைபெற்றால், தாங்கள் சூத்திர சிவாஜியை க்ஷத்திரிய சிவாஜியாக்கினால், அவர்கள் வீசும் வலையில் நாடு விழுகிறது என்றுதான் அர்த்தம். வைதீக மார்க்கம் மங்கி மடியும். ஆரிய குலோத்தமா! இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா?

காகப் : மோரோ பண்டிதரே! என் சிந்தனையைக் குழப்பி விட்டீரே! நான் சிவாஜிக்கு முடி சூட்டுவதுதான் நமது சனாதன மார்க்கத்துக்குப் புதிய பலம் என்று எண்ணியல்லவா இதற்குச் சம்மதித்தேன்.

மோ : பொதுப்படையாகப் பார்க்கும்போது தாங்கள் சொல்வது சரி. ஆனால் மராட்டியத்தின் இன்றைய நிலையை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் பற்றிக் கவனிக்கும் போது...

காகப் : கவனித்தாக வேண்டுமே மோரோ பண்டிதரே! நாம் செய்கிற காரியம் காலா காலத்துக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே. ஆமாம், அவசரக் கோலத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாதே. தாங்கள் சொல்லியிருப்பது புதியதோர் சிக்கல். நான் எதிர்பாராதது.

மோ : சிவாஜி ராஜனாகட்டும். அதாவது, ராஜா வேலை பார்க்கட்டும். குருதேவா! ஆனால் அது அவனுடைய ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும். உரிமையாக்குவதும், தருமமாக்குவதும், வேத ஆகமச் சம்மதம் தருவதும், சாஸ்திரமுறைப்படி மகுடாபிஷேகம் செய்விப்பதும் க்ஷத்திரியனாக்குவதும் தான் ஆபத்து என்று கருதுகிறேன். சிவாஜியைச் க்ஷத்திரியனாக்கினால் குருஜீ, ஒரு புதிய பரம்பரையை உருவாக்குகிறார்