பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

117


என்றல்லவா பொருள்? சிவாஜியின் மகன், பேரன், அவன் மகன் இப்படிப் பரம்பரையாய் ராஜாக்கள் ஆவர்; க்ஷத்திரியராவர்.

காகப் : புரிகிறது, மோரோ பண்டிதரே! நன்றாகப்புரிகிறது. இதற்காகத்தான் என் சம்மதம் பெற இவ்வளவு துடித்தனரோ? தந்திரக்காரர்கள். மோரோபந்த்! கவலைப்படாதீர். என் தீர்ப்பை மாற்றிக் கொள்கிறேன். பட்டாபிஷேகத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறேன்.

மோ : ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். க்ஷமிக்கணும். மகா பண்டிதரான தங்களிடம் தர்க்கித்ததாக எண்ணிவிடக்கூடாது.

காகப் : மோரோபந்த் நமக்குள் ஏன் இந்த வித்தியாசம்? உபச்சாரம்! இருவருக்கும் ஒரே அபிலாஷை என்று இப்போது சொல்லுகிறேன். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது ஆரிய தர்மத்துக்கு லாபகரமானதா, குலதர்மத்துக்கு ஏற்றதா என்பதைக் கவனித்துதான் செய்வேன்.

மோ : அதிலென்ன சந்தேகம்? ஆரிய தர்ம ரட்சகராகிய தங்களுக்குத் தெரியாததும் உண்டோ... நான்.

காகப் : போய் வாரும்! சிவாஜிக்குப் பட்டமில்லை. போய்வாரும்.

மோ : எப்படிச் செய்தால் யுத்தம் என்று தங்களுக்குத் தோன்றுகிறதோ அவ்விதம் செய்யுங்கள் ஸ்வாமி. நான் வருகிறேன்.

(மோரோ போகிறார்)

ரங்கு : என்ன ஸ்வாமி இது கிணறு வெட்ட புதுப்புது பூதங்களாகக் கிளம்பிண்டே வர்றதே. சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் கூடாதுன்னு இந்தப் பண்டிதர் சொல்றார். சிவாஜியிடமோ பேசி வாதாடி ஒரு