பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அறிஞர் அண்ணா


முடிவுக்கு வந்தாச்சு. ஊர் பூராவும் அமர்க்களப்படறது. மகுடாபிஷேக வைபவ விஷயமா!

காகப் : அதனாலே நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதா? மோரோ பண்டிதர் சொன்னதைத் தள்ளிவிட முடியுமா?

ரங்கு : அப்படியானா சிவாஜிக்கும், சிட்னீசுக்கும் கொடுத்த வாக்கு?

காகப் : வேதவாக்கு மிஞ்சியாடா இதெல்லாம். மோரோ பண்டிதர் சொல்றார் பட்டம் கூடாதுண்ணு. தகுந்த காரணமும் காட்டறார்.

ரங்கு : விபரீதமாகிப் போகும் ஸ்வாமி! இப்போது நாம் மாத்திப் பேசினா.

காகப் : விபரீதமும் ஆகாது; வினாசமும் நேராது; தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.

ரங்கு : ஆமாம் ஸ்வாமி நம்மவர் சொன்னா என்பதற்காக அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாது பாருங்கோ.

காகப் : எது செய்தாலும் சிலாக்கியம்? சிவாஜிக்கு முடிசூட்டுவது நல்லதா? மோரோ பண்டிதர் சொல்கிறபடி பட்டாபிஷேகத்தைத் தடுத்தால் நல்லதா என்பதை யோசிக்க வேணும். சாங்கோபாங்கமாக. நம்ம தர்மம் பாழாகக் கூடாது.

ரங்கு : ஸ்வாமி! நாம் சொன்ன எல்லா நிபந்தமனைகளுக்கும் சிவாஜி சம்மதித்து விட்டார். ஹோமம், சமாராதனை, பிராமணாளுக்குத் தானம், துலாபாரம், சகலத்துக்கும் சம்மதிக்கிறார். பாடம் உண்டு!

காகப் : பாடம் இருக்கோன்னோ? இருந்தும் சமாராதனை செய்யறானே! தட்சணை தருகிறானேண்ணு பூரிச்சுப் போறே, என்னடா பிரமாதம் இதிலே. ஸ்ரீராமச்சந்திரருக்குப் பட்டாபிஷேகம் ஏற்பாடு ஆச்சேன்னோ?