பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

121


காகப் : எதற்கா? சிட்னீஸ் விஷயத்தை வீணாக வளர்த்த இஷ்டப்படவில்லை. பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவிட்டனவா?

சிட் : ஆகா! தாமதம் இராது குருஜி. நூற்றுக்கணக்கானவர்கள் பணி செய்தபடி இருக்கிறார்கள்.

காகப் : பாபம்! குழந்தை மனசு அவாளுக்கு.

சிட் : கொற்றவனிடத்தில் அவர்களுக்கு அவ்வளவு பக்தி குருதேவா!

காகப் : பரிதாபம்! எல்லாவற்றையும் பாழ் செய்கின்றன இந்த ஏடுகள்.

சிட் : ஸ்வாமி! தாங்கள் சொல்லுவது?

காகப் : புரியவில்லையா சிட்னீஸ்! பட்டாபிஷேக ஏற்பாட்டை நிறுத்திவிடு.

சிட் : நிறுத்திவிடுவதா? ஏன்?

காகப் : பட்டாபிஷேகம் பாப காரியம்! சாஸ்திரம் சம்மதம் இல்லை துளியும் துருவி துருவிப் பார்த்தும் பலனில்லை. நான் சம்மதிக்க முடியாது சிட்னீஸ்.

சிட் : ஏன்? ஏன் சம்மதிக்க முடியாது? தாங்களே கூறினீரே. சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்யலாமென்று. இப்போது தாங்களே மறுக்கிறீரே! மராட்டியரின் களிப்பைச் சிதைக்கிறீரே!

காகப் : சாஸ்திரத்தை மீண்டும் பார்த்தேன். சாங்கோ பாங்கமாக. தீர்க்கமாக யோசித்தேன். என் செய்வேன் சிட்னீஸ். சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்வது பாபகாரியம் என்றே தோன்றுகிறது. நான் சம்மதிக்க முடியாது.

சிட் : வீணையைக் காட்டி நரம்பை ஒடிக்கிறீரே!

காகப் : ஆர்வம் மிக்கவனே! ராஜபக்தி, சினேக பக்தி, உனக்கு முக்கியமான குணங்கள் அவை. ஆனா தேவ பக்தியை