பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அறிஞர் அண்ணா


நான் இழக்கலாமோ? இவ்வளவு ஏடுகளும் கூறுகின்றனவே பாப காரியம். பாப காரியம் என்று. நான் என்ன செய்ய?

சிட் : இந்த ஏடுகளையெல்லாம் நாடு ஏற்காது ஸ்வாமி. மராட்டிய மணிமுடியை அவர் தரித்தே ஆக வேண்டும். கண் இருக்கும் போதே அதைக் காண வேண்டும் என்று துடிக்கிறது மராட்டியம்.

காகப் : பரிதாபமாகத்தான் இருக்கு. நான் என்னத்தைச் செய்ய? பாலைவனத்திலே புகுந்த பிறகு தாகவிடாய் ஏற்பட்டால் கஷ்டந்தான்.

சிட் : உவமை கூற. இதுவா ஸ்வாமி சமயம்?

காகப் : என்னை என்ன செய்ய சொல்கிறாய்? உன் நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்னைப் பாபி ஆகும் படி சொல்கிறாயா? என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை, அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? சிட்னீஸ்! நீ காகப்பட்டரை நன்னா அறிய மாட்டாய். சாஸ்திர சம்மதமற்றக் காரியத்தைச் செய்யச் சொல்லி சர்வேஸ்வரனே வந்து சொன்னால் கூடச் செய்ய மாட்டேன். ஆகமாதிகளை மேலும் ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இந்த மண்டலத்தின் முதன் மந்திரி. முதல் மந்திரி முறையிலே இருக்கிற மோரோ பண்டிதர் என்னும் பிராமணோத்தமர் கூட இதை எதிர்த்தாராமே?

சிட் : ஒஹோ அவருடைய வேலையா இது? மோரோ பண்டிதரைச் சந்தித்ததின் விளைவா இது?

காகப் : பைத்தியக்காரா? ஏண்டா வீணா அவர் மேலே சந்தேகப்பட்டு பாபத்தை தேடிக் கொள்றே. இதோ பார்! டே, ரங்கு! கொஞ்சம் வெளியே போய் இரு. யாரும் இங்கே வரப்படாது. ஜாக்கிரதை, போ! இதோ பார், சிட்னீஸ் நீ காயஸ்த குலம்; க்ஷத்திரியனாகலாம். சிவாஜி க்ஷத்திரியனாக முடியாது. இப்போது சம்மதம்னு