பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

123


சொல்லு. ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன். உனக்கு. முடிதரித்துக் கொள். மராட்டியத்துக்கு மகாராஜனாக்குகிறேன்.

(பதறி)

சிட் : என்ன, என்ன? எனக்குப் பட்டமா? சிவாஜி சிருஷ்டித்த ராஜ்யத்துக்கு நான் ராஜனாவதா?

காகப் : நான் ஆக்றேண்டா ராஜனா!

(ஆத்திரமடைந்து)

சிட் : சாஸ்திரம் இதற்குச் சம்மதிக்கிறதா? நியாயம், நீதி இதிலே இருக்கிறதா? ஆகமம் இந்த அக்ரமத்துக்கு ஆதரவு தருகிறதா? ஸ்வாமி! என்னைப் பரீட்சிக்கிறீரா?

காகப் : பைத்தியக்காரா? உண்மையைத் தாண்டா சொல்றேன். உனக்குப் புத்தியிருந்தா பூபதியாகலாம். முறையல்ல, நெறியல்ல, தர்மமல்ல என்றெல்லாம் தயங்கினா பலன் இல்லையே. தர்மம் எது? அதை நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குச் சம்மதமா?

சிட் : இந்தச் சதிக்கா? சண்டாளச் செயலுக்கா?

காகப் : மந்த மதியடா உனக்கு.

சிட் : நொந்து கிடக்கும் மனதிலே தீ மூட்டாதீர். சிவாஜிக்கு. மகுடாபிஷேகம் செய்ய வந்து, சிவாஜியின் மாளிகையிலே இருந்து கொண்டே, சிவாஜிக்கு உரிய ராஜ்யத்தை, சிவாஜிக்கு சேவை செய்யும் எனக்கு, ஆஹா! என்னால் கேட்டுச் சகிக்கவும் முடியவில்லை. இந்தச் செயலால் சிட்னீஸைத் துரோகியாகும்படிச் சொல்கிறீர். தூபமிடுகிறீர். இவ்வளவு ஏடுகளும் உமக்கு இந்த அநீதியையா காட்டுகின்றன?

காகப் : சிட்னீஸ்! சித்தத்திலே சீற்றம் குடிபுகுந்தால் பலன் என்ன? கலக்கம், குழப்பம். இப்படிப்பட்ட சமயத்திலே வரத்தான் செய்யும். தர்மமா? அதர்மமா? பாபமா?