பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

125


காகப் : ஆமாம்! அவனுக்கு என்ன ஆத்திரம், அழுகை வந்தது தெரியுமோ? சரியான பயல்களெல்லாம் கிடைத்திருக்காண்டா இந்த சிவாஜிக்கு.

ரங்கு : இப்ப அவன் இருக்கிற நிலையை கவனிச்சா அவனாலே ஏதாவது வம்பு வருமோன்னு தோண்றது ஸ்வாமி.

காகப் : நானும் கூடத்தான் அப்படி எண்றேன். இனி நாமும் முடிவுக்கு வந்தாகணும்.

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! இப்படிச் சதா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தா.

காகப் : திடீர்னு அறுந்து போனாலும் போகும்.

ரங்கு : ஆமாம்! சிட்னீஸ் சீறினதைப் பார்த்தா இனித் தங்களுடைய சம்மதத்தைக் கேட்காமலே கூட பட்டாபிஷேகத்தை நடத்திவிடுவான் போல இருக்கு.

காகப் : அப்படிச் செய்யமாட்டான்! சரி, எதற்கும் இனி கால தாமதம் செய்யக்கூடாது. நீ சென்று மோரோபந்தைக் கண்டு அவரிடம் சொல்லிவிடு. குரு பலமான சாஸ்திர விசாரணைக்குப் பிறகு சிவாஜிக்குப் பட்டம் சூட்டிவிடுவதுண்ணு தீர்மானித்து விட்டார். ஆரிய தர்மத்தைக் காப்பற்ற அதுதான் சிறந்த மார்க்கம் என்று குரு நம்பறார். உம்மிடம் சொல்லச் சொன்னார். விசாரப்பட வேண்டாம்; பயமும் வேண்டாம்ணு. அவரிடம் வினயமாய்ச் சொல்லிவிடு. டே ரங்கு! என் ஏற்பாட்டிற்கு அவரையும் சம்மதிக்கச் சொல்லு.

ரங்கு : ஆகட்டும்! இதோ போகிறேன்.

காகப் : அங்கு எங்காவது அழுது கொண்டிருப்பான். அந்த அசட்டுச் சிட்னீஸ். அவனிடம் சொல்லு. உன் ராஜ விசுவாசத்தையும், திடமனதையும், உத்தம குணத்தையும் மெச்சிண்டிருக்கிறார். உன்னைக் குரு சோதிச்சுப்