பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அறிஞர் அண்ணா


பார்த்தார். நீ துளி கூட சத்தியத்திலே இருந்து தவறாமல், துளி கூட மனமயக்கமே காட்டாததைப் பார்த்து பூரிச்சுப் போனார். பட்டாபிஷேகத்துக்கான காரியத்தைத் துரிதப்படுத்தப் சொன்னார். அப்படீன்னு சொல்லுடா.

ரங்கு : ஸ்வாமி! இப்ப முடிவான தீர்மானமாயிடுத்துன்னு அர்த்தமோ?

காகப் : ஆமா சிவாஜிக்குத்தாண்டா பட்டாபிஷேகம்.

ரங்கு : குருதேவா! முதலில் முடியாது என்றீர். பிறகு சம்மதம்ணு சொன்னீர். மறுபடியும் முடியாதுண்ணு சொல்லி விட்டீர். இப்ப மறுபடியும் சம்மதம்ணு சொல்றீர்.

காகப் : நாலு முறை கர்ணம் அடித்தேன்னு சொல்றியோ!

ரங்கு : கர்ணம் போட்டதாகச் சொல்வேனா குரு.

காகப் : சீடனல்லவா! சொல்லமாட்டே! டே ரங்கு! நாலு கர்ணம்தான் அடித்தேன். அதிலே தப்பு என்னடா? நமக்கு இருப்பது நாலு வேதம்டா, நாலு. தெரியுமோ? போ, போ! போய்ச் சொன்னதைச் செய்யடா.

(போகிறான்)

காட்சி - 26

இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், குடியானவன்.

பால : கேசவப்பட்டரே! உம்முடைய பந்துக்களெல்லாம் வந்து விட்டாளோ?

கேசவ : ஆகா! சகலரும்.

பால : ஏறக்குறைய பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கும் போல இருக்கு சமாராதனையில்.

கேசவ : பத்தாயிரத்து நூறுவோய்!