பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

127


பால : சிவாஜி தர்ம தாதா! அவன் நீடூழி காலம் வாழ வேண்டும்.

கேசவ : அந்த தர்ம தாதா கெடக்கட்டும் ஓய்! இப்படிப்பட்ட தர்ம தாதாக்களை நமக்குத் தருகிற நமது குல குருமார்களைப் போற்றும் ஓய்! இவ்வளவு சுக போகத்தை நமக்குத் தரும் சாஸ்திரம் குலையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலே நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

பால : காகப்பட்டர் இங்கு பிரவேசித்ததும் நமது குலத்துக்கே யோகம் பிறந்துவிட்டது. அப்பா கேசவப்பட்டரே. இந்த மராட்டியா யுத்தத்திலே ஜெயித்தபோது, எவ்வளவு ஆர்ப்பரிச்சா தெரியுமா? இப்ப பொட்டிப்பாம்பாகி விட்டா. நாம் இப்போத்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியறது. நமது கௌரவம் காகப்பட்டரால் நிலைத்தது. அவரே நமது குல ரட்சகர்.

(குடியானவன் வருதல்)

கேசவ : வாடாப்பா, வா!

குடி : கும்பிடுறேன் சாமி!

கேசவ : ஊர் எவ்வளவு ஜெகஜோதியாயிருக்கு பார்த்தியோ?

பால : எங்கு பார்த்தாலும் வேத ஒலி, பிராமணா சேவை. இப்படிப்பட்ட காட்சியைக் காணக் கொடுத்து வைத்தோமே.

குடி : மழையே காணுங்களே.

கேசவ : நம்முடைய நாட்டிலே வந்திருக்கிற புண்ணிய புருஷாளைத் தரிசிச்சிண்டிருக்கா வர்ண பகவான். அவாள் சந்தோஷமா இருக்கச்சே, கண்ணீர் விடப்படாது பாரு.

குடி : சாமி ! என்ன கதை வேணுமானாலும் சொல்லுங்க. மழையில்லாததாலே வயக்காடெல்லாம் வெடிச்சப்