பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அறிஞர் அண்ணா


போச்சு. மாடு கண்ணெல்லாம் எலும்பும் தோலுமாப் போச்சுங்க.

பால : ஏன் ஓய்! இவன் இந்த சாது சன்னியாசி கூட்டத்தைச் சேர்ந்தவனா இருப்பானோ?

குடி : ஏங்க, அவுங்க சொல்றதிலேயும் தப்பு ஒண்ணும் இல்லிங்களே! இப்ப பாருங்க, பத்தாயிரக் கணக்கான பிராமணா போஜனத்துக்கு வந்திருக்காங்களே, இவுங்கள்ளாம் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தப்ப எங்க போனாங்கண்ணு கேக்கறாரு பண்டாரத்தையா. நியாயந்தானுங்களே! அப்போ காணுங்களே. இவுங்களெல்லாம். சமாராதனைண்ணு சொன்ன உடனே, அடேங்கப்பா புத்திலேயிருந்து ஈசல் கிளம்புற மாதிரியும், பழத்தோட்டத்திலே இருந்து வௌவால் கிளம்புற மாதிரியும் வந்துட்டாங்களே.

பால : டே! பிராமணாளைத் தூஷிக்காதேடா. இதிகாசத்தை, சாஸ்திரத்தைப் பழிக்காதே.

குடி : என்னமோ போங்க! வரவர எங்களுக்கு இந்தப் புராணம், இதிகாசம் இதிலெல்லாம் சந்தேகம் வலுத்துக் கிட்டுத்தான் வருது.

பால : சந்தேகம் வலுக்கிறதா. அட, சர்வேஸ்வரா! இந்தப் பாபிகளுக்கு என்ன தண்டனை தருவாயோ?

கேசவ : ஏண்டா விதண்டாவாதி! விதண்டாவாதம் பேசிண்டிருக்கே அஞ்ஞானி.

குடி : அடே! நீங்கதான் பெரிய மெய்ஞானியா இருங்களேன். நாழியானாலும் ஆகட்டும். ஒரு சந்தேகம். இந்த அண்டசராசரங்களை எல்லாம் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதாதானே சொல்றீங்க.

கேசவ : அதிலே உனக்கென்னடா சந்தேகம். ஏண்டா ஒரு வஸ்து நிக்கணும்னா, அதுக்கு ஒரு ஆதாரம் வேணுமோ, இல்லையோ?