பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

45


பால : சும்மா இரும் ஓய்! இது என்ன மாடா போ மரமா போ, பூச்சியா போ, புழுவாப் போன்று சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?

கேசவ : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஓய்! காலம் இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.

(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)

அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?

வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?

கேசவ : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?

வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு ...ஜே.'

கேசவ : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு! இவன் என்ன குலம்? இவன் குலத்துக்குக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது. என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ?

(எதிரே மோரோபந்த் வருகிறார்)

பால : ஓய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.