பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

49


மோரோ : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.

கேசவ : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஓய். பாலச்சந்திரரே! வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.

காட்சி - 10

இடம் : பாலாஜி வீடு

உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

(பாலாஜி ஓலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)

பாலாஜி : பகதூர்! பாடத்தைப் படிடா

பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப்போல வளர்ந்திருக்க... ஏண்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?

பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டதே.

பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை.

பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?

பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு. டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா!

(பகதூர் சிரிக்க)