பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அறிஞர் அண்ணா


அப்படியில்லேடா இப்படி...

(புன்சிரிப்பு)

பகதூர் : வரலியே பாலாஜி!... புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்... முடியலியே.

பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா?

(பகதூர் சிரிக்க)

ம்....அதேதான்....அதேதான் புன்சிரிப்பு...

பகதூர் : இதா புன்சிரிப்பு...?

பாலாஜி : பாடத்தைச் சொல்லு.

பகதூர் : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே!

பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?

பகதூர் : திரை இருக்கே.

பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?

(திரையை எடுத்ததும்)

பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பாலா : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு மரம்போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிடவேணாமா?

பகதூர் : எங்கே?

பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.