பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

51


பகதூர் : சரி!

பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இதுபோலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?

பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்...

பாலாஜி : எதுடா?

பகதூர் : உயிர் போறது.

பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா.

பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!

பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பகதூர் : சுத்தணுமா?

பாலாஜி : சரி ! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.

பகதூர் : சரி!

பாலாஜி : என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில்சொல்லுவே?

பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.

பாலாஜி : பெண்கள் அப்படித்தான். கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா! பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.

பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே பாலாஜி.

பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன்.