பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அறிஞர் அண்ணா


பகதூர் : சாமி கதைப் படிச்சா?

பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா! ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?

பகதூர் : படி பாலாஜி.

பாலாஜி : ஓ... மாதர் திலகமே.

பகதூர் : யாரைக் கூப்பிட்டே?

பாலாஜி : டே! படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?

பகதூர் : ஒ! கேக்கறேனே!

பாலாஜி : என்ன சொன்னான்!

பகதூர் : அவன் சொல்றான்!

பாலாஜி : என்னடா சொல்றான்?

பகதூர் : என்ன சொல்றான்?

பாலாஜி : இந்த ஈறேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா; ஈரேழு லோகத்தையும்.

பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன்! என்ன வந்து கேக்கறியே!

பாலாஜி : சும்மா புளுகுடா! காதல்கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!

பகதூர் : படி பாலாஜி !

பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்புபோல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை