பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

53


நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே!

(படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்)

காட்சி - 11

இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், சிட்னீஸ்.

(கேசவப்பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)

சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே!!

(காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்)

ஓய், கேசவப்பட்டரே...

(கேசவப்பட்டர் திரும்புகிறார்)

கேசவ : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.

சிட்னீஸ் : பரவாயில்லை. பட்டாச்சாரிஸ்வாமி. உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?

கேசவ : கேலி செய்றேளா?

சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?

கேசவ : யார் சொன்னது உம்மை அப்படி...

சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.

கேசவ : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம்.