பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

55


சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட...

கேசவ : நான் சாமான்யனப்பா சிட்னீஸ் என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசிச் க்ஷேத்திரத்திலே காகப்பட்டர்ணு ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரத்வர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.

சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?

கேசவ : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.

சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?

கேசவ : நிச்சயமா! சந்தேகமா அதற்கு.

சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.

கேசவ : நானா?

சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.

கேசவ : ஆமாம்!

சிட்னீஸ் : ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப்