பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

59


சிட்னீஸ் : பிரமாதமான விசாரமில்லை; சுலபத்திலே போய்விடக் கூடியதுதான்.

சிவாஜி : ஒளியாமல் பேசு பட்டாபிஷேகம் சம்மந்தமாக ஏதேனும்...

சிட்னீஸ் : ஆமாம்; சிற்சில இடங்களிலே எதிர்ப்பு.

சிவாஜி : யாருடைய எதிர்ப்பு? முன்புதான் நாம் கீறின கோட்டைத் தாண்டாதிருக்க சர்தார்கள் சங்கநாதம் செய்தனர். இப்போது எதிர்ப்பவர் யார்?

சிட்னீஸ் : வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். க்ஷத்திரிய குலமே இப்போது கிடையாதாம்.

சிவாஜி : அதனால்?

சிட்னீஸ் : ஏதேதோ வகையான பேச்சு எல்லாம் அடிபடுகிறது!

சிவாஜி : யார் இந்த எதிர்ப்புக்கு முக்கியமாக முன்நின்று வேலை செய்பவர்?

சிட்னீஸ் : பலபேர் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால்...

சிவாஜி : எதையோ மறைக்கிறாய். வேண்டாம் சிட்னீஸ்! உண்மையைக் கூறு. என் உள்ளம் நோகுமோ என்று பயந்து படுகுழியை மறைக்காதே. யார் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவது?

சிட்னீஸ் : நமது முதலமைச்சர் மோரோபந்த்.

சிவாஜி : மோரோபந்த்... மோரோ.. அவரா எதிர்க்கிறார்? என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர்.

சிட்னீஸ் : உம்மிடம் அவருக்கு இப்போதும் வெறுப்பில்லை. சாஸ்திரம் கெடுகிறதாம். வீணான பயம் அவருக்குக் கூட. ஆனால் எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாடு