பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அறிஞர் அண்ணா


செய்திருக்கிறேன். எதிர்ப்பு, சந்தேகம், கோபம்... எல்லாம் ஒழிந்துவிடும். எல்லா எதிர்ப்புகளும் அடங்கிவிடும். அவருடைய அனுமதி கிடைத்தால், இவர்கள் காட்டும் சாஸ்திரங்களை, சந்தேகங்களை, வாதங்களை அவர் தவிடுபொடியாக்கிவிடுவார்... அவ்வளவு திறமைசாலி!

சிவாஜி : யார் அந்தத் திறமைசாலி?

சிட்னீஸ் : காகப்பட்டர், காசிவாசி, வேத வேதாந்தத்தின் உபன்யாசகர். வியாக்யானத்திலே அவரை மிஞ்சுபவர் கிடையாது. இன்று இங்கு எதிர்ப்பு செய்பவர்கள் எல்லாம் அவர் வந்து விளக்கம் கூறினதும் வாயை மூடிக் கொள்வர். சந்தேகங்களை சம்ஹரிப்பார். எதிர்ப்புகளைத் துவம்ஸம் செய்வார். அப்படிப்பட்ட காகப்பட்டரையே இந்தப் பட்டாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க இங்கு வரும்படி தூது அனுப்பத் திட்டம் போட்டுள்ளேன்.

சிவாஜி : அவர் இருக்குமிடம்?

சிட்னீஸ் : காசி.

சிவாஜி : காசி! காசி க்ஷேத்திரம். கங்கைக் கரை மராட்டிய மண்டலத்திலே இருக்கிறது. அவர் அங்கு இருக்கிறார்.

சிட்னீஸ் : இன்றே புறப்படுகிறார்கள்.

சிவாஜி : தூதுவர்களை, மூன்று பூசுரர்களை அனுப்புகிறேன். அவர்கள் இங்கு எதிர்ப்பு செய்தவர்கள்.

சிவாஜி : சம்மதித்தார்களோ போக?

சிட்னீஸ் : அவர்கள் காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து விட்டால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறுகிறார்கள்.

சிவாஜி : செய்! அனுப்பிப்பார்!

(போகிறார்கள்)