பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அறிஞர் அண்ணா


பாலச்சந் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ்? அவர்கள் சாஸ்திரத்தைதானே எடுத்துக் காட்டுகிறார்கள்.

சிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா? இப்படிப்பட்ட காரியத்துக்கா?

கேசவப் : சமயம், சந்தர்ப்பம், தயவு, தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ! தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ.. முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.

பாலச்சந் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம்? சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும்? வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா? வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப்பற்றிப் பேசலாம்.

சிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.

கேசவப் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ்? நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா? சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான். இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும் காசிவாசி காகப்பட்டரிடமிருந்து! அவ்வளவுதானே?

சிட்னீஸ் : அவ்வளவுதான்.

கேசவப் : செல்கிறோம் காசி நோக்கி...

சிட்னீஸ் : சென்று கூறுங்கள் - காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை. ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட