பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

63


வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். 'ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்' என்று பலர் பலவிதமாகப் பேசியபோதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மாற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.

கேசவப் : சொல்கிறோம்... சொல்கிறோம்... சொல்லாமலா இருப்போம்.

சிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே! உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.

கேசவப் : தாராளமாக! பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.

பாலச்சந் : கூறவேண்டும் கேசவப்பட்டரே! சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.