பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அறிஞர் அண்ணா


கேசவப் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே! நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால் தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.

சிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.

(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)

கேசவப் : ஓய், புறப்படும்! புறப்படும்! என்ன ஓய்! அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்?

பாலச்சந் : முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி! அதற்கு போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு நாம். பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஓய் யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா.

கேசவப் : ஏன்! ஒய்! போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே?

பாலச்சந் : மந்த புத்தி ஒய் உமக்கு. போக இஷ்டமில்லேன்னா வேறு எவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய. காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஓய் காகப்பட்டரிடம் சென்று கூறுவோம். மராட்டியத்தின் நிலையை மட்டம் தட்டுவோம். இந்த மாவீரர்களை...