பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

65


கேசவப் : ஓய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.

பாலச்சந் : ஆமாம்! அவனிடம் சொன்னேன். அசடு ஓய் நீர்! சொன்னால்?

கேசவப் : அப்படி என்றால்?

பாலச்சந் : ராஜ்யம்... பூஜ்யம் ஓய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச்செய்கிறேன். வாரும். (போகிறார்கள்)

காட்சி - 14

இடம் : ஆஸ்ரமம்.

உறுப்பினர்கள் : காகப்பட்டர் - ரங்குபட்டர் - சிஷ்யர்கள்.

(சிஷ்யர்கள் வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றனர். காது கொடுத்துக் கேட்கமுடியாத நிலையில் ரங்கு வந்து..)

ரங்கு : ஏண்டாப்பா பிரகஸ்பதிகளே! காது குடையறது! போதும், நீங்க போட்ட கூச்சல். அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி காதில் கூட விழுந்திருக்கும். போதும்; நிறுத்திவிட்டுப் போய் சமையல் காரியத்தைக் கவனியுங்கோ. சதா சர்வ காலமும் ஆகா ஊகூண்ணு கூவிண்டிருக்கிறது போதும்... போங்கள்...

சிஷ்யன் : குரு பாடம் படியுங்கள் என்கிறார்...

ரங்கு : இப்போ இந்த குரு சொல்றார்; போதும், நீங்கள் பாடம் படிச்சதுண்ணு. எழுந்திருங்கள். மகா பெரிய ஞானஸ்தாள்தான்.

(சீடர்கள் போக)

தலைவலி வந்துடறது இங்கே. காலை முதல் மாலை வரை ஒரே காது குடைச்சல். இந்தப் ப்ரகிருதிகள் ப்ராணனை