பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அறிஞர் அண்ணா


வாட்டிண்டிருக்க இந்தக் கருமம் எப்பத்தாந் தீருமோ தெரியல்லே நமக்கு. இந்தக் குருவுக்கோ...

(காகப்பட்டர் வருகிறார்)

காகப் : ரங்கு! என்னடாப்பா குருவுக்கு அர்ச்சனை?

(ரங்கு அவர் காலில் விழுந்து)

ரங்கு : நான் ஒண்ணும் அபசாரமா பேசிடலே ஸ்வாமி.

காகப் : ரங்கு! இந்த உபசாரமெல்லாம் வேண்டாம். நெடு நாட்களாக நோக்கு விசாரம் இருக்கு என்பது தெரியும் நேக்கு.

ரங்கு : என் மனசை அறிஞ்சிண்டிருக்கேள். மகான் அல்லவோ தாங்கள். விசாரம் இருப்பது உண்மைதான். ஆனால்...

காகப் : ஆனால்...என்ன?

ரங்கு : அந்த விசாரம் என் பொருட்டல்ல. சகல சாஸ்திர சம்பன்னராகிய தங்கள் பொருட்டுத்தான் விசாரப் படுகிறேன்.

காகப் : என்பொருட்டு என்னடாப்பா விசாரம்?

ரங்கு : ஏனிராது குரு சாமான்யாளெல்லாம் எவ்வளவோ சம்பத்துக்களுடன் வாழறா. அரண்மனைகளிலே வாசம் செய்துண்டு. நந்தவனங்களிலே அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோடு உலாவிண்டு...

(இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு ஒரு சீடன் நிற்பதைக் கவனித்த ரங்கு அவனைப் பார்த்து)

டேய், மண்டு! நாங்கள் ஏதாவது பேசிண்டிருந்தா நீ கேட்டிண்டிருக்கணுமோ? போடா உள்ளே...

(சீடன் போகிறான்)

கேட்டேளோ! அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோட உலாவிண்டு ஆனந்தமா காலம் கழிக்கிறா....