பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அறிஞர் அண்ணா


அத்தனை அரண்மனைகளிலும் நாம் கம்பீரமாகச் செல்லலாம். ஒரு ராஜா மற்றொரு ராஜாவிடத்திலே அன்பு காட்டுவான் மேலுக்கு. உள்ளே பகை புகையும். சமயம் வாய்த்த போது சத்ரு ஆவான். நமக்கோ எல்லா ராஜாக்களும் நமஸ்காரம் செய்வா. ஒரு ராஜாவும் நம்மைச் சத்ருவா கருதமாட்டான். ஒரு ராஜாபுக்கு ராஜபோகம் இருப்பது போலவே ரணயோகமும் உண்டு. அதாவது சண்டை வந்துவிடும். ஆபத்து வரும். நமக்கோ ராஜாதி ராஜாக்கள் ரணகளத்திலே மண்டைபிளக்க சண்டை போட்டுக் கொண்டாலும் கவலை இல்லை. யுத்தம் நமக்குக் கிடையாது. யுத்த சமயத்திலே வெட்டு, குத்து யார் யாருக்கோ இருக்கும். நம்மை அண்டாது. எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான், பைத்தியக்காரா! ராஜபோகம் ஆனந்தத்துக்கு மட்டுமல்லடா; ஆபத்துக்கும் அது இருப்பிடம்.

(புலித்தோலைக் காட்டி)

இதோ பார்! இது என்ன?

ரங்கு : என்ன ஸ்வாமி இது! என்னை முட்டாள் என்று எண்ணிக் கொண்டாலும் பரவாயில்லை. கேவலம் குருடன் என்று தீர்மானித்து விட்டீர் போலிருக்கிறதே! இது என்னவென்று கேட்கிறீரே! இது புலித்தோல். இது கூடவா தெரியாது.

காகப் : இது தெரிகிறதே தவிர இது உபதேசம் செய்கிற பாடம் தெரியவில்லையே நோக்கு.

ரங்கு : என்ன! புலித்தோல் உபதேசம் செய்கிறதா?