பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அறிஞர் அண்ணா


பகதூர் : பாலாஜி ; எனக்குச் சில சமயங்களிலே இந்துவைக் பார்க்கக்கூட பயமா இருக்கு.

பாலாஜி : என்னடா பயம்? அவ பொம்பளைதானே?

பகதூர் : அவ பார்வை ஒரு விதமா இருக்கு பாலாஜி.

பாலாஜி : எப்படிடா இருக்கு ஏமாளி?

பகதூர் : 'டேய், பகதூர்! உன் சேஷ்டைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாக்கிரதையாக நடந்து கொள்' அப்படின்னு பயங்காட்டுவது போல் இருக்கு பாலாஜி.

பாலாஜி : அது வெறும் பாவனைடா, பாவனை! அவளுக்கு அந்தப் பய மோகன் மேலே கொஞ்சம் அன்பு. அவனோ ராஜ்ய காரியங்களிலேயே மூழ்கிக் கெடக்கிறான். ஆகவே அவனிடத்திலே ஆசை குறையும். நீ மட்டும் கொஞ்சம் சமார்த்தியமாக நடந்து கொண்டால் ஜெயம் நிச்சயம்.

பகதூர் : சண்டையிலே கூட சீக்கிரமா ஜெயிச்சுடலாம் போல இருக்கு. இந்தக் காதல் விஷயம் அவ்வளவு சுலபமா இல்லியே.

பாலாஜி : சரிசரி பேசிக்கிட்டே பொழுதை ஒட்டாதே. ஆரம்பி, பாடத்தை. கடைசி வரை பதுமையாவே பேசிக்கிட்டிருந்தா போதுமா? பதுமை பாடம் முடிச்சதும் நிஜமாகவே ஒரு பெண்ணிடம் இந்தப் பாடத்தை நடத்த வேண்டும். அந்தப் பாடம் முடிந்த பிறகு இந்துமதியிடமே உன் திறமையைக் காட்ட வேண்டும்.

பகதூர் : சரி, பாலாஜி! ஆரம்பிக்கிறேன். முக்கனியே! சக்கரையே!

பாலாஜி : பகதூர்: அந்தப் பாடம் வேண்டாம். காதல் சம்பாஷணை நடத்துவோம். நான் பதுமைக்குப்