பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

73


பின்புறமிருந்து பேசுவேன். ஆ! அதாவது நீ காதலன்; நான் காதலி.

பகதூர் : அய்யோ! நீ காதலியாகிவிட்டால் எனக்குக் காதலே வேண்டாம்டா பாலாஜி.

பாலாஜி : போதும், வாயை மூடிக்கொண்டு பேசு.

பகதூர் : வாயை மூடிக்கொண்டு எப்படிப் பேசுவது?

பாலாஜி : ம்...நேரமாகிறது.

பகதூர் : சரி! கண்ணே கனிரசமே! உன்னை நான் காதலிக்கிறேன்.

பாலாஜி : என்னையா?

பகதூர் : ஆம். உன்னைத்தான் உல்லாசி! உன்னைத்தான் உயிரே!

பாலாஜி : உண்மையாகவா?

பகதூர் : ஆம். இந்தச் சோலையிலே, அதோ, கொஞ்சி விளையாடும் கிளிகள் சாட்சி. கூவும் குயில்கள் சாட்சி. உன்னை நான் உண்மையாகவே காதலிக்கிறேன்.

பாலாஜி : டேய், பகதூர்! இவ்வளவு உருக்கமா பேசிட்டாயோ, இந்துமதி உனக்குத்தான் சம்மதித்து விடுவாள். உன்பாடு அதிர்ஷ்டம்தான். வா, போவோம்.

காட்சி - 16

இடம் : ஆஸ்ரமம்.

உறுப்பினர்கள் : கங்கு, ரங்கு, கேசவப்பட்டர், பாலச்சந்திரர்.

(காகப்பட்டர் சுவடியைப் பிரித்துப் பார்த்து விட்டுப் பிறகு)

காகப் : டே, ரங்கு! இங்கே வாடா!