பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

77


ரங்கு : குருதேவா? நமது புராண சாஸ்திரங்களை நிறைய கரைத்துக் குடித்தவன் என்று கர்வம் கொண்டிருந்தேன். நிஜமாச் சொல்றேன்.... என்னாலே நீங்க கேட்ட சம்சயத்துக்குச் சமாதானம் கூறச் சக்தியில்லே.

காகப் : ஐவருக்கும் பத்தினி! பதிபக்தியும் தவறக் கூடாது.

ரங்கு : ஆமாம்! பழச் சாறும் பருக வேணும்; பழமும் கெடக்கூடாது என்பதுபோல சிக்கலாக இருக்கே.

காகப் : பைத்தியக்காரா! இப்படிப்பட்ட சிக்கலான சமயத்திலே துரோபதை 'ஏ கண்ணா! உன்னையன்றி வேறு கதி ஏது. என் கற்பும் கெடலாகாது; ஐவருக்கும் மனம் கோணலாகாது என் செய்வேன்' என்று பஜித்தாள். அந்த சமயத்திலே கோபாலகிருஷ்ணன் குழலை ராதையின் கிரகத்திலே வைத்து விட்டு, ருக்மணியின் இல்லம் வந்திருக்க, ருக்மணி, 'நாதா! தங்களுடைய மதுரமான குழலைக் கேட்க வேண்டும்' என்று வற்புறுத்துகிற சமயம் பரந்தாமன் சிரித்தார். சிரித்துவிட்டு, கீழே கிடந்த மலரை எடுத்து ஐந்து பாகமாக்கி ஆகாயத்திலே வீசினார். உடனே ஐயனின் அற்புதத்தை என்னென்பது? தருமருடன் தேவாலயம் செல்ல துரோபதை. அர்சுனனுடன் நந்தவனத்தில் துரோபதை. பீமனுடன் சமையலறையில் துரோபதை. சகாதேவனுடன் துரோபதை. இவ்விதமாக ஐந்து பேருடனும் ஏக காலத்திலே துரோபதை சென்ற அற்புதம் நிகழ்ந்தது.

ரங்கு : ஆஹா, அருமை! அருமை குருதேவா.

காகப் : பதிபக்தியும் நிலைத்தது; சிக்கலும் தீர்ந்தது. அல்லவா?

ரங்கு : ஆமாம்!

காகப் : எப்படி?

ரங்கு : கண்ணன் அருள்!

காகப் : புத்திக்கூர்மை வேண்டுமடா! புத்தி தீட்சண்யம் வேண்டும். நமது புராணதிகளிலே ஏதேனும் சந்தேகம் எவனுக்கேனும் பிறந்தால், உடனே புத்தி