பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அறிஞர் அண்ணா


தீட்சண்யத்தை உபயோகித்து, இப்போது நான் சொன்னதுபோல ஒரு விளக்கக் கதை கட்ட வேண்டும். உடனே தயங்காமல்.

ரங்கு : ஸ்வாமி! இது தாங்கள் கட்டிய கதைதானா?

காகப் : ஆமாம்! கட்டப்படாதோ? என்னடா இது? வியாசர் பாரதம் செய்தார். நான் துரோபதம் எனும் புதிய காவியத்தைச் செய்து காட்டினேன். தவறோ?

ரங்கு : தவறோ, சரியோ ஸ்வாமி. பிரமாதமா இருக்கு வியாக்யானம். விசித்திரமானதா இருக்கு.

காகப் : நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அனந்தம். அவைகளிலே ஏதேனும் எவருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டு பழிச்சு பேசினா, ரங்கு! அவாளிடம் வீணான விவாதம் பேசிண்டிருக்கப்படாது. ஆண்டவனுடைய லீலைகள், விசித்திரம் அனந்தம். சாமானியாளாகிய நம்மால் அவைகளின் முழு உண்மையை, ரகசியத்தின் மகிமையைத் தெரிந்துக் கொள்வது முடியாத காரியம் என்று சொன்னால் தீர்ந்தது.

ரங்கு : ஆமாம்! புண்ணிய ஏடுகளைச் சந்தேகிப்பது பாபம் என்பதிலே பாமரனுக்கு நம்பிக்கை இருக்கிற வரையிலே.

காகப் : நமது யோகத்துக்கு ஈடாக வேறெதுவும் இராது!

ரங்கு : ஸ்வாமி! யாரோ வரா. நம்மவா போலயிருக்கு. யாரா இருக்கும்?

(கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர் வருதல், காகப்பட்டரிடம் ஒலையைத் தர, அதைப் படித்தான பிறகு...)

காகப் : மராட்டிய மண்டலத்து மறையோர்களே! மட்டற்ற மகிழ்ச்சி உமது தூதால் எனக்கு உண்டாகிறது.