பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

79


கேசவ : நாங்கள் வந்திருக்கும் காரியத்தைப் பற்றியல்ல ஸ்வாமி நாங்கள் மகிழ்வது; எப்படியோ. ஒன்று, தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிடைத்ததே, தன்யாளானோமே என்பதைப் பற்றியே பரம சந்தோஷம் எங்களுக்கு.

பாலச் : ஆரியகுலத் தலைவரின் ஆஸ்ரமத்தைக் கண்டு தரிசிக்கும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று ஆயாசப்படும் ஆரிய சோதராள் மராட்டிய மண்டலத்திலே அனந்தம்.

காகப் : அப்படியா? மெத்த சந்தோஷம்.

கேசவப் : ஸ்வாமி! எங்கு பார்த்தாலும் அகாரியாளுடைய செல்வாக்கே பரவிண்டு இருக்கும் இந்தச் சமயத்திலே, அகாரியாளுடைய ராஜ்யங்களே தலை தூக்கிண்டு ஆடும் இந்தக் காலத்திலே, புனிதமான கங்கைக் கரையிலே, கைலாயமோ, வைகுந்தமோ என்று யாவரும் வியந்து கூறத்தக்க வகையிலே இந்த மகோன்னதமான ஆஸ்ரமத்தை அமைத்துண்டு ஆரிய தர்மத்தை அழியாது பாதுகாத்துவரும் தங்களைக் கலியுக பிரம்மா என்றே நாங்களெல்லாம் கொண்டாடுகிறோம்.

காகப் : நமக்குள்ளாகவோ இவ்வளவு புகழ்ந்து கொள்வது? நாம் ஒரே குலம், ஒரே சதை, ஒரே ரத்தம்.

கேசவப் : அப்படி சொல்லிவிடலாமோ? ஆரிய குலம் தான் நாங்களும். இன்னும் அநேகர். ஆனால் என்ன கெதியில் இருக்கிறோம் மராட்டிய மண்டலத்திலே? எமக்கு மதிப்பு உண்டோ மார் தட்றா! மராட்டிய ராஜ்யம் ஸ்தாபித்தாளாம். அவாளுடைய வீரத்தால்தான் விடுதலை கிடைத்ததாம்.

பால : விதண்டாவாதிகள் நமது சாஸ்திரத்தைக் கேலி செய்றா.

காகப் : அப்படியா! அவ்வளவு மூடுபனியா அங்கு? அஞ்ச வேண்டாம்; அங்குள்ள அஞ்ஞானத்தைப் போக்குவோம். மேலும் கேசவப்பட்டரே! தாங்கள் கொண்டு வந்துள்ளது