பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அறிஞர் அண்ணா


ஒலை அழைப்பு அல்லவா? ரங்கு நம்மை அழைக்கிறார்கள், மராட்டிய மண்டலத்துக்கு வந்து போகும்படி.

ரங்கு : நம்மையா ஸ்வாமி! உபன்யாசங்க புரியவா?

காகப் : அசடே! அதற்கல்ல. மராட்டிய மண்டல மாவீரன் சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்ள வேணுமாம். அதனை நடத்திக் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறாளடா.

ரங்கு : நம்மை காசியிலிருந்து மராட்டியத்துக்கு! தங்கள் கீர்த்தி, குருஜீ அவ்வளவு தூரம் பரவி இருக்கிறதா?

கேசவ : கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கணும். இது விஷயமா ஆனந்தப்படுறதும் பெருமையா நினைக்கிறதும் மட்டும் போதாது.

காகப் : டே, ரங்கு! பேசாம இருடா பெரியவா சூட்சமம் இல்லாம பேசமாட்டா.

கேசவப் : மராட்டியத்துக்கு இப்ப உங்களை அழைக்கிறதிலே ஒரு சூட்சமம் இருக்கத்தான் செய்கிறது. சிவாஜி மாவீரன்! சந்தேகமில்லே. இருந்தாலும் நாமோ வில்வீரன் ஸ்ரீராமச்சந்திரன் காலம் முதற்கொண்டே ஏன், அதற்கு முன்னாலே இருந்தே கெளரவிக்கப்பட்ட குலம்.

காகப் : ஆமாம்! அதிலே என்ன சந்தேகம். யுகயுகமாக நிலைத்து நிற்கும் உண்மையல்லவோ அது!

கேசவப் : அப்படித்தான் ஐதீகம். ஆமாம்; மராட்டியத்திலே எமக்கு இப்போ மதிப்பு கிடையாது.

காகப் : அப்படியா?

கேசவப் : ஆமாம்! சிலபேர் நாம் ஆதிக்கம் செலுத்துவது கூடாதுங்கறா! ஏன் என்றால் யுத்தத்திலே சேர முடியாதவாண்ணு கேலியும் பேசறா.

காகப் : அப்படிப்பட்ட அஞ்ஞானிகளும் அங்கே இருந்திண்டிருக்காளோ?