பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

81


ரங்கு : தாங்கள் போனால் சூரியனைக் கண்ட பனி போல் அஞ்ஞானிகள் இருக்குமிடம் தெரியாம போயிடுவா.

கேசவ : மராட்டிய வீரர்களிலே ஒரு தந்திரசாலி தான் எங்களைத் தூது அனுப்பியவன். பெயர் சிட்னீஸ். காயஸ்தகுலம் அவன். எப்படியாவது காகப்பட்டரை வரவழைக்க வேண்டுமென்று திட்டம் போட்டவன்.

காகப் : ஏன்?

கேசவப் : சிவாஜியின் பட்டாபிஷேகம் தாங்கள் வராவிட்டால் நடைபெறாதே.

காகப் : எதிர்ப்போ?

கேசவப் : ஆமாம்.

காகப் : பக்கத்து அரசனோ?

கேசவ : இல்லை! உள் நாட்டிலே நாங்கள் தான் எதிர்த்தோம். சிவாஜி சூத்திரன், அவன் எப்படி க்ஷத்திரிய தர்மப்படி ஜொலிக்க ஆசைப்படலாம்? சாஸ்திரம் சம்மதிக்குமோ? வேதவிதிப்படியா? என்றெல்லாம் எதிர்த்தோம்.

காகப் : ஒகோ! இந்த ஓலையிலே அதுபற்றி ஒன்றையும் காணோமே?

கேசவப் : எப்படி இருக்கும்? நாங்கள் தான் எதிர்த்தோம். எங்களையே தூது அனுப்பிவிட்டான். அந்த தந்திரசாலி. தங்கள் சம்மதம் கிடைத்து விட்டால் எங்கள் எதிர்ப்புகளை மட்டம் தட்டிவிடலாம் என்ற நினைப்பு.

காகப் : அப்படிப்பட்ட ஆசாமியா? ரங்கு கொண்டுவா ஏடு.

ரங்கு : ஸ்வாமி! நாம் போயி நம்மளவாளுக்கு வேண்டிய சகாயம் செய்து...

காகப் : மண்டு மராட்டியத்துக்கு நாம் ஏண்டா போகணும்? கேசவப்பட்டரே! விஷயம் விளங்கிவிட்டது. மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து