பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அறிஞர் அண்ணா


கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.

கேசவப் : ஒலையே அதுபோலத் தீட்டினால்...

காகப் : ஆகா தருகிறேன். கொண்டு போய் வீசும், அவன் முகத்திலே! நமது ஆசியும் ஆதரவும் இல்லாமல் என்ன செய்ய முடியம் அவனால்?

கேசவப் : அதுமட்டுமில்லை. ஸ்வாமி! காகப்பட்டரே 'முடியாது பட்டாபிஷேகம்: பாப காரியம்' என்று சொல்லி விட்டார் என்பது தெரிந்தால்...

காகப் : பிறகு அவன் பட்டம் சூட்டிக் கொள்ள முடியவே முடியாது.

கேசவப் : பரத கண்டமே அவனைப் பாபி என்று சபிக்கும்.

காகப் : படட்டும்... ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை. ஒலை தயாரானதும் நீர் புறப்படலாம். இதற்குள் டேய், ரங்கு! அவாளுக்குப் பாலும், பழமும் கொடு, சிரமப்பரிகாரம் கெய்து கொள்ளட்டும்.

காட்சி - 17

இடம் : வீதி

உறுப்பினர்கள் : சிட்னீஸ், பட்டர்கள்

சிட்னீ : வாருங்கள், வாருங்கள்! போன காரியம் ஜெயந்தானே! (பட்டர்கள் கடிதம் கொடுக்கக் கண்டு) என்ன இது! வர முடியாது என்று எழுதியிருக்கிறாரே.

கேசவம் : நாங்கள் என்ன செய்வது?

சிட்னீ : மூன்று பேர் சென்றீர்களே?

கேசவப் : நயமாக, வினயமாக, பவ்யமாக விஷயத்தை எடுத்துச் சொன்னோம்.

சிட்னீ : சொன்னதின் பலனா இது?