பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

83


கேசவப் : அவர் வயிறு குலங்கச் குலுங்கச் சிரிக்கிறார்.

சிட்னீ : மக்களின் மனநிலை, மண்டலத்தின் மனநிலை.

கேசவப் : எல்லாம் சொன்னோம். சிவாஜியின் வீர தீரத்தைப் பற்றிச் சொன்னோம். அவர் கோதண்டத்தில் ஒரு ஸ்லோகம் சொல்லி எங்களைத் திணற அடித்துவிட்டார்.

சிட்னீ : ம்..சரி..சரி.... என் புத்திப் பிசகு. உங்களை அனுப்பினேன். சதிகாரர்களே போங்கள்.

கேசவப்: ஆத்திரம் கூடாதென்று ஆகமம் அலறுகிறது; வேதம் முழங்குகிறது.

சிட்னீ : எங்காவது ஆற்றோரத்தில் போய்ப் பேசிக்கொண்டிருங்கள் இதுபோல. இப்படி அடுத்துக் கெடுக்காதீர்கள்.

(போகிறார்கள்)

நிச்சயமாக இவர்கள் சதிதான் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்தக்காகப்பட்டரின் குலமாயிற்றே என்று அனுப்பினேன். குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்.

காட்சி - 18

இடம் : தர்பார்

உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதி, வீரர்கள், மோகன்.

1. தளபதி : மகராஜ்! புதிய மாளிகை கட்டியதும் அதற்கு என்ன பெயரிட உத்தேசம்?

சிவாஜி : நீயே சொல்லு, என்ன பெயரிடலாம்?

1. தளபதி : சலவைக்கல்லால் கட்டப் போவதால் வெள்ளை மாளிகை என்று பெயரிடலாமே?

2. தளபதி : அப்படி பார்த்தால் மாளிகையின் கொலு மண்டபத்திலே தங்கத் தகடு போடப்படுவதால்