பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அறிஞர் அண்ணா


காட்சி - 19

இடம் : விருந்து நந்தவனம்

உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்துமதி, மோகன், பாலாஜி, பகதூர்.

(இந்துமதி சோர்ந்து நிற்க, சாந்தாஜி வந்து)

சாந் : இப்படி வைத்துக் கொண்டிராதே முகத்தை! என் பேச்சைக் கேளம்மா. உன் நன்மைக்குத்தான் இந்த ஏற்பாடு.

இந்து : என் நன்மை? தேள் கொட்டுவது தேக ஆரோக்யத்துக்கா அப்பா? எதற்காகப்பா என்னை இப்படி வாட்டுகிறீர்கள்?

சாந் : பைத்தியக்காரப் பெண்ணே! நானும் கிளிப் பிள்ளைக்குச் சொல்லுவது போல் சொல்லிவிட்டேன். அவன் கேட்கவில்லை.

இந்து : அதற்காக?

சாந் : அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பகதூர் வருவான்; அவனிடம் சிரித்துப் பேசு. அவன் உன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பான்.

இந்து : ஆஹா! அதற்கென்ன சம்மதிக்க வேண்டும்? அதுதானேயப்பா உமது கட்டளை?

சாந் : ஏனம்மா இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்? பகதூர் துஷ்டனல்ல. கௌரவமான குடும்பம். அடக்கமானவன். கொஞ்சம் அசடு. அவ்வளவுதான். மேலும்...

இந்து : என்னமோ அப்பா! எனக்கு இந்தப் பேச்சே வேதனையாக இருக்கிறது.

சாந் : என்ன, மகா வேதனை? நான் என்ன, உன்னை பகதூரைக் கல்யாணம் செய்து கொள் என்றா கூறுகிறேன்? பாவனைக்கு, ஒப்புக்கு ஒரு வார்த்தை