பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அறிஞர் அண்ணா


(பாலாஜியும், சாந்தாஜியும் போக பகதூர் பாடத்தை ஆரம்பிக்கிறான்.)

பகதூபூர் : மயிலே! குயிலே! மானே! தேனே! மதிமுகவதி! கலர்முகவதி!...

இந்து : இது என்ன அஷ்டோத்திரமா? சகஸ்ரநாமமா?

பகதுர் : இல்லை...வந்து...

இந்து : என்ன இல்லை. பாலாஜி கற்றுக் கொடுத்த பஜனையோ? ஏன் மறைக்கிறீர்? எனக்கும் இஷ்டம்தான் கூறும்.

பகதூர் : இந்து!

இந்து : ஏன்?

பகதூர் : ஒன்றுமில்லை.

இந்து : அவர்கள் போய்விட்டார்கள் என்று பயமா? பயப்படாதீர்கள். நான் பகலிலே இப்படியே தானிருப்பேன். பாதி ராத்திரியிலேதான்....

பகதூர் : பாதி ராத்திரியிலே என்ன இந்து அது?

இந்து : ஏன் உங்களுக்குத் தெரியாதா? பாலாஜி சொல்லவில்லையா?

பகதூர் : என்ன இந்த விஷயம்? எனக்கு ஒன்றும் தெரியாதே?

இந்து : தெரியாதா? விளையாடுகிறீர். தெரியாமலா இருக்கும். தெரிந்துதான் இருக்கும். பாலாஜி சொல்லி இருப்பாரே.

பக : அந்தப் பாழாய்ப்போன பாலாஜி ஒன்றுமே சொல்லவில்லையே. பாதி ராத்திரியிலே என்ன நடக்கும்? சொல்லேன்...

இந்து : சொல்ல முடியாது. சொன்னால் நீங்களும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுவீர்கள்.