பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

91


பக : எனக்கொன்றும் விளங்கவில்லையே!

இந்து : நான் அழகாக இருக்கிறேனா, இல்லையா?

பக : ரதி போல இருக்கிறாய்!

இந்து : இருக்கிறேனல்லவா? நடுஜாம மணி அடித்ததும்...

பக : அடித்ததும்?

இந்து : ஊகூம்... நான் சொல்ல மாட்டேன்.

பக : நான் சாந்தாஜியைக் கூப்பிடுகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.

இந்து : ஏன் வந்தீர்கள்?

பக : அதுவா இந்து? நான் உன்னைக் காதலிக்கிறேன்.

இந்து : காதலியுங்களேன். அதனால் என்ன?

பக : உன்னுடைய அழககைக் கண்டு...

இந்து : மயங்கிவிட்டிருப்பீர்கள்.

பக : இல்லை அழகைக் கண்டு, அன்பு கொண்டு, உன்னைத் தவிர வேறொரு மங்கையைக் கனவிலும் கருதுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! உன்னை நான் என் உயிர் போலக் காதலிக்கிறேன்.

இந்து : இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?

பக : இந்தச் சோலையிலே...

இந்து : மாலையிலே உலாவுகிறோம்.

பக : என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதமாக் கண்ணே?

இந்து : எனக்குச் சம்மதந்தான். வேறு யார் இவ்வளவு தைரியமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?