பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அறிஞர் அண்ணா


ஏற்பட்டு விட்டதே. நானும் துடுக்குத் தனமாகப் பேசி விட்டேன். அவர் எவ்வளவு கோபமாகப் போய்விட்டார் பார்த்தீர்களா? நான் என்ன செய்வேன்.

சாந் : கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் நான் என்ன செய்வேன்? அந்தப் பாலாஜி யோசனையால் கெட்டேன்.

இந்து : அப்பா!

காட்சி - 20

இடம் : இந்துமதி தனிஅறை

உறுப்பினர்கள் : இந்துமதி.

(இந்துமதி தனிமையில் சோகமாய்ப் பாடுகிறாள்)

காட்சி - 21

இடம் : தர்பார்

உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், தளபதிகள், வீரர்கள்.

(கோட்டை உடைத்தல்)

1. தள : காகப்பட்டரின் மறுமொழி கிடைத்துவிட்டதாமே? சாஸ்திர சம்மதம் பெற மார்க்கம் இருக்கிறதாமே?

சிவாஜி : ஆமாம்! சூத்திரனை க்ஷத்திரியனாக்குகிறாராம். அதற்கு ஒரு சடங்கு இருக்கிறதாம்.

மோகன் : பறவைக்கு இறக்கையை ஒட்டிவிடப் பார்க்கிறார்கள். சூட்சி பலித்துவிட்டது.

சிவாஜி : இதிலே சூட்சி என்ன இருக்கிறது? அவர்கள் சாஸ்திரத்தைத் தானே கூறுகிறார்கள்?

மோகன் : ஆமாம் சாஸ்திரத்தை தான். ஆனால் யாருடைய சாஸ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கிய போது, அந்த சாஸ்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையைத்